Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை காலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான, இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தலில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறியுள்ளனர்.

அத்தோடு, புதிய அரசியல்யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது கரிசனையையும் எடுத்துரைத்தனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to கூட்டமைப்பு இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு!

Post a Comment

Followers