Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி என்று உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, தீர்ப்பை வாசித்து வருகிறது.

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. சசிகலா உள்ளிட்டவர்கள் செய்த குற்றம் தெள்ளத் தெளிவாக உள்ளது என்று இரண்டு நீதிபதிகளும் கூறியுள்ளனர். அதன்பிரகாரம், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். 4 வாரத்துக்குள் சசிகலா உள்ளிட்டவர்கள் சரண் அடைந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 

0 Responses to சொத்துக்குவிப்பு வழக்கு:சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...