Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் புதிய கொன்சியூலர் பிரிவு நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் முடிவில், இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணை கொண்டுவர முயற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப்பதிலளித்த போதே பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலுமு் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைக்கு பாதகமாக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்போட வெளிவிவகார அமைச்சு முயல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை முற்றிலும் பொய்யான தகவலாகும். இலங்கைக்குக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த பிரேரணையும் கொண்டுவர முயலவில்லை. மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு பாதகமான எந்த விடயமும் இடம்பெறாது. அதனை உறுதியாக கூற முடியும்.

மார்ச் மாத முதல்வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா மனித உரிமை அமர்வில் பங்கேற்று கடந்த காலத்தில் இலங்கை மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவார்.

ஜெனீவாவின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிகமானவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதயசுத்தியுடன் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கி வருகிறது. நாம் முன்னேற்றகரமாக மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் நற்பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக வேறு பிரேரணைகள் கொண்டுவரப்படுமென நம்ப முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...