அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டமும் வருவது குறைந்து உள்ளது. எனவே உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக 2013 ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவக திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த அம்மா உணவகம் திறக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
குறைகிறது தரம் : அம்மா உணவகங்களின் செயல்பாட்டை சென்னை மாநகராட்சி நேரடியாக கவனித்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அம்மா உணவகங்களில் வினியோகிக்கப்படும் சாப்பாட்டின் தரம் குறைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து
வருகின்றனர். சென்னை எழும்பூர் வரதராஜபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டு உள்ளது. 'வார்தா' புயலின் போது இந்த அம்மா உணவகத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஆனால் பராமரிப்பு பணி முடங்கி அம்மா உணவகமும் மூடப்பட்டு விட்டது.

0 Responses to அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்!