Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் விமானப்படையும் இராணுவமும் ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை இரண்டொரு நாட்களில் விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “கேப்பாபுலவு காணிப்பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்கு 54 காணிகளுக்கு உரிமங்கள் காணப்படுகின்றன. அதில் 42ஐ பரிசீலித்த அரசாங்க அதிபர், அவை மக்களுக்குச் சொந்தமானவை என, ஜனாதிபதி மற்றும் விமானப்படைத் தளபதிக்கு அனுப்பியுள்ளார். அதேபோல், புதுக்குடியிருப்பிலுள்ள 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் உள்ளனர். இராணுவத்தினருக்கான காணிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், அங்கிருந்து வெளியேறி, மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to கேப்பாபுலவு காணிகளை சில தினங்களில் விடுவிக்க வேண்டும் என்று விமானப்படைக்கு ஜனாதிபதி பணிப்பு: சம்பந்தன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...