Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை காலை வடகொரியா மீண்டும் ஒருமுறை மத்திய வீச்சம் உடைய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து காலை  7:55 மணிக்கு பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து ஜப்பானின் கடல் எல்லைப் பகுதியில் விழுமாறு இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் வடகொரியா மேற்கொண்ட முதலாவது ஏவுகணை சோதனை இது என்பது மட்டுமன்றி இந்த வருடத்தின் முதலாவது சோதனை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே  இந்த ஏவுகணை சோதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். எனினும் இச்சோதனை குறித்து வடகொரியா உடனடியாக எந்த உறுதிப்படுத்தும் தகவலையும் வெளியிடவில்லை. அண்மையில் தான் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய சக்தி வாய்ந்த அதிநவீன ஏவுகணை சோதனையை நாம் நிகழ்த்தத் தயாராக உள்ளோம் என வடகொரியா அச்சுறுத்தல் விடுத்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் பிராந்திய கமாண்ட் செண்டர் தெரிவித்த தகவலில் தற்போது வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனையானது மத்திய வீச்சம் கொண்ட ballistic ஏவுகணை எனத் தாம் இனம் கண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தற்போதைய அதிபரான கிம் ஜொங் உன்  இனது காலம் சென்ற முன்னால் தந்தையும் அதிபருமான கிம் ஜொங் II இனது பிறந்த நாளை அந்நாடு அனுசரித்து சில தினங்களுக்குள் இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜப்பான் பிரதமர் அபே விடுத்த அறிக்கையில் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட தகவலில் அமெரிக்கா இவ்விவகாரங்களில் 100% வீதம் ஜப்பானுக்கு உறுதுணையாகச் செயற்படும் என்று வாக்களித்துள்ளார். இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக தென்கொரியா வெளியிட்ட தகவலில் குறித்த ஏவுகணை 500 Km வரை பயணம் செய்யக் கூடிய வலிமை கொண்டது என்றும் இது கண்டம் விட்டுக் கண்டம் பாயக்  கூடிய ஒன்று அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சர்வதேசத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா இரு அணுவாயுத சோதனைகளையும் பல ஏவுகணைப் பரிசோதனைகளையும் நிகழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சனிக்கிழமை காலை ஒடிசா மாநிலத்தின் வீலர் தீவில் இருந்து இந்தியா எதிரி ஏவுகணையை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதாகவும் இதனை மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு இந்தியப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்ததாகவும் கூட செய்திகள் வெளியாகி உள்ளன.

0 Responses to வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : ஜப்பான் பிரதமர் அபே கண்டனம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...