Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் குடியுரிமையை அரசாங்கம் பறிக்கப்போவதாக வதந்தியொன்று பரவி வருகின்றது. எனினும், அதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றன. அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் தாமதப்படுத்தப்படுவது தொடர்பில் நானும் திருப்தியடையவில்லை.

குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளருடன் சம்பந்தப்பட்ட மிக் யுத்த விமானக் கொடுக்கல் வாங்கல், டுபாய் வங்கிக் கணக்கு, றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை போன்ற பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

சிறிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதால் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அதனால் நல்லாட்சியைப் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இந்த விடயத்தில் சில அதிகாரிகள் உரிய முறையில் தமது கடகைகளை நிறைவேற்றவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...