Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டி.டி.வி. தினகரன் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமது அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன். அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் இன்று நியமனம செய்யப்பட்டார்.பதவியை நியமனம் செய்த பின்னர் அவருக்கு ஆதரவு அளிக்குமாறு தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு அறிவித்தார் சசிகலா. மேலும், தங்களின் செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதத்திலும் மன்னிப்பு கோரியதால் அதிமுகவில் மீண்டும் டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

அம்மாவால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை கட்சிக்கு அழைத்து இந்த பதவியை கொடுத்ததை நான் ஏற்கவில்லை என்பதால், எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று அமைப்புச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன் தெரிவித்துள்ளார். தமது தொகுதி மக்களின் மனதை கண்டறிந்து அதன்படி அடுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.