திருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பேருந்து நிலையம் எதிரே ஜெயலலிதா
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக ஸ்ரீரங்கம் தொகுதி அமைச்சர்
வளர்மதியும், திருச்சி கிழக்கு தொகுதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும்
கலந்த கொண்டனர். இரவு 9.00 மணிக்கு கூட்டத்திற்கு வந்தனர்.
ஏற்கனவே சேம்பரசம் பேட்டை பகுதியில் இதே போல பள்ளி குழந்தைகளுக்கு
சைக்கில் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்க அமைச்சர்
சென்றால் திரும்ப வர முடியாத சூழல் ஏற்படும். அந்த பகுதி மக்கள்
கொதிப்புடன் இருக்கிறார்கள் என்கிற தகவல் முன் கூட்டியே கிடைத்ததால் அந்த
நிகழ்ச்சி ரத்து செய்திருந்தார்.
அதனால் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் முதலில் அவசர அவசரமாக பேசி முடித்தார்.
அடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, கூட்டத்தின் ஒரு
மூலையிலிருந்து, மூன்று முறை கல் வீசப்பட்டது. ஒரு கல், பேசிக்
கொண்டிருந்த அமைச்சரின் கால் அருகே விழுந்தது. கல் வீச்சில் யாரும் காயம்
அடையவில்லை. இதை பார்த்த அமைச்சர் நடராஜன், 'எப்படி மிரட்டினாலும்,
எங்களின் பொதுச்செயலர் சசிகலா தான் அதை யாராலும் மாற்ற முடியாது' என
ஆவேசமானார். கற்கள் வந்த பகுதியை நோக்கி போலீசாரும், கட்சி யினரும்
சென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. அதன்பின், சிறிது நேரம்
கூட்டம் நடந்தது. பின், போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர்களும், கட்சி
நிர்வாகிகளும் கிளம்பினர். அமைச்சர் வளர்மதி மீதுள்ள வெறுப்பில் தான் கல்
வீச்சு நடந்ததாக, அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
பொதுக் கூட்டத்துக்கு, 100க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர்.
அவர்களில், 80 பேர் பெண்கள். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக,
நலத்திட்ட உதவி என்ற பெயரில், இலவச சேலைகள் கொடுப்பதாக, பெண்கள்
கூட்டத்தை கூட்டியிருந்தனர்.
இதே போல திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, எம்.எல்.ஏ., சந்திரசேகர்,
துவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றார்.
அப்போது, தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில், 37
பேர் கறுப்பு சட்டையுடன், எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை
போலீசார் கைது செய்தனர்.

0 Responses to சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு