ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றுவது முக்கியமானது. ஆகவே, கால அவகாசம் வழங்குவதில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதைப் புரிந்துகொள்ளாதவர்களே, தேவையற்றுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், தற்போதை அரசாங்கத்தின் கீழாவது, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவே எதிர்ப்பார்க்கிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றவே இலங்கைக்கு கால அவகாசம்: சுமந்திரன்