Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் நிலவி வரும் குழப்பகரமான அரசியல் நிலவரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சிறப்புச் சட்டசபைக் கூட்டத் தொடரைக் கூட்டலாம் என தமிழக ஆளுனருக்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக இரு பிரிவுகளாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், கட்சியின் செயலாளர் சசிகலாவிற்கு ஆதரவான சட்டசபை உறுப்பினர்கள் கூவத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் தொதகை குறைவாக உள்ளது. ஆயினும் பெரும்பாண்மையை நிருபிக்க முடியும் என முதல்வர் பன்னீர் செல்வம் உறுதி கூறுகின்றார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என அரசியற் தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், தமிழக ஆளுநர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம், இது தொடர்பான ஆலோசனையைக் கோரியிருந்ததாகவும், அதற்கான அவரது ஆலோசனையிலே தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடரினைக் கூட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.  இது இவ்வாறிருக்க, இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் பன்னீர் செல்வம் அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதே வேளை, சசிகலா உள்ளிட்டவர்களின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to சிறப்புச் சட்டசபைக் கூட்டத் தொடருக்கு ஆலோசனை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...