Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எந்த தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று மாநில உளவுப்பிரிவு போலீஸார் களஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர்.

சசிகலா போட்டியிடுவதற்கு வசதியான தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் தயாரித்து வருகிறார்கள். அதில் உசிலம் பட்டி தொகுதி முதலிடத்தில் உள்ளது. ஆண்டிப்பட்டி, திருமங்கலம் தொகுதிகளும் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய இரு தொகுதிகளும் தேனி மாவட்டத்தில்  உள்ளது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கொடுத்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆண்டிப்பட்டி தொகுதி. இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதே காரணம் என்றும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் சசிகலாவுக்கும் இந்த தொகுதியே சிறந்தது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. நீதிபதி விரைவில் ராஜினாமா செய்வார் என தெரிகிறது.

0 Responses to எந்த தொகுதியில் சசிகலா போட்டியிட்டலாம்?: உளவுப்பிரிவு போலீஸார் கள ஆய்வு அறிக்கை!

Post a Comment

Followers