Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்புக்கான எந்தவித அழுத்தங்களையும் இலங்கைக்கு இந்தியா வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ள நிலையில், ‘இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட 1987ஆம் ஆண்டு காலப்பகுதிக்கும், தற்போதுள்ள காலப்பகுதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அப்படியான நிலையில், வடக்கு- கிழக்கின் மீள் இணைப்புக்கு இந்தியா இலங்கை மீது அழுத்தங்களை வழங்காது என்று எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

குறித்த நிலைப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்திருந்தது. இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அவ்வாறு யாரும் சொல்லவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.