Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும் என்று சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். தலைவரே வர வர புரியுற மாதிரில்லாம் டிவீட் போடுறீங்க என்று ரசிகர்கள் கமல் ஹாஸனை கேட்டுள்ளனர். உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது கருத்து தெரிவிப்பார். அவர் தனது கருத்துகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெரிவிப்பார். எந்த மொழியில் ட்வீட்டினாலும் ஒன்னுமே புரியவில்லை என்று தான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கமல் போடும் ட்வீட்டுகளை பார்த்து என்ன சொல்ல வருகிறீர்கள் தலைவா, ஒன்னுமே புரியலையே என்பார்கள் ரசிகர்கள்.

சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து அந்த ட்வீட்டுக்கான அர்த்தம் புரிந்ததாக கூறி கமலை ஜீனியஸ், தீர்க்கதரிசி என்று கொண்டாடுவார்கள். அதிகாரம் இரு வகைப்படும் என்று கமல் இன்று ட்வீட்டியிருந்தார். அதை பார்த்த ஒருவர் கூறியிருப்பதாவது, தலைவரே வர வர புரியுற மாதிரில்லாம் டிவீட் போடுறீங்க... என தெரிவித்துள்ளார். என்னடா ஆண்டவர் சொன்னது புரியுதேனு பாத்தேன்.. குஜராத் காந்தி சொன்னது, அதான் புரிஞ்சிருச்சு.

0 Responses to நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்:சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல்

Post a Comment

Followers