Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதன் பிரகாரம், முல்லைத்தீவின் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகள் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படா விட்டால், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் போராட்டமொன்றை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது.

இந்தப் போராட்டம், எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறும். அத்தோடு, அதன்பின்னர், கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பினை நோக்கி வாகனப் பேரணியொன்றை நடத்துவதற்கும் தமிழ் மக்கள் பேரவை தயாராகியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டங்களை வலுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜனாதிபதி உறுதியளித்தபடி காணிகளை விடுவிக்காவிட்டால், எதிர்வரும் 08ஆம் திகதி ஹர்த்தால்: தமிழ் மக்கள் பேரவை

Post a Comment

Followers