Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

1200 கோடி அரசு காப்பீட்டு பணம் எங்கு செல்கிறது, முறையான மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறதா- 10 – 15 லட்சம் ஒரு மருத்துவமனை அங்கீகாரத்திற்கு ஏஜென்ட் வழியாக லஞ்சம் பெறுகின்றனரா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு இது தெரியுமா?
மேற்கண்டவாறு சமூக ஆர்வலர்களும், நோக்கர்களும் எழுப்பி, பல்வேறு தகவல்களை சமூக வலைத் தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழக அரசு ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது.இதற்காக 1200 கோடி வருடத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தி வருகிறதாம். இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனை மட்டும் அல்லாமல்,தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படலாம் என்றதால் பல தனியார் மருத்துவமனைகள் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி வந்தன.

சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு பாராட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதனால் மருத்துவர்களும் மகிழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்தனர். 1000 மருத்துவமனைகளுக்கு மேல் health system project ல் இணைந்து இருந்தனர். தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாராம்.

அதன்படி முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் தற்போது இணைந்துள்ளவர்கள் மீண்டும் தங்கள் மருத்துவமனையில் அரசு கேட்கும் அனைத்து வசதிகளையும் உறுதிபடுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாம். இங்குதான் லஞ்சம் பெற வழிவகை மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது. ஒரு மருத்துவமனை காப்பீட்டு திட்டத்தில் இணைய பத்து முதல் பதினைத்து லட்ச ரூபாய் கொடுத்தால் தான் அனுமதி வழங்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.அதற்கு ஒரு ஏஜென்ட் மூலமாக பரிவர்த்தனை நடைபெறுவதாவும் கூறப்படுகிறது. தற்போது 175 மருத்துவமனைகள் மட்டுமே லஞ்சம் கொடுத்து இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.பல மருத்துவமனைகள் எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் அவசியமே இல்லை என்று ஒதுங்கிக் கொண்டனராம்.

மக்களுக்கு ஒரு அற்புத சேவையாற்ற கிடைத்த திட்டத்தில் இப்படி லஞ்சம் பெற்று அனுமதி வழங்கும் தில்லாங்கடி வேலை நடைபெறுவதை கண்டு மனம் வெதும்பி ஒரு மாவட்ட ஆட்சி தலைவரே ஒதுங்கிக் கொண்டாராம். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத்தான் சிகிசையளிக்கபடுகிறது. தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மிக,மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. பல லட்சம் ஏழை,எளிய மக்கள் பலன் பெற்றனர்.

தற்போது தனியார் மருத்துவமனைகளிடம் லஞ்சம் கேட்பதால் அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். லஞ்சம் கொடுத்து இணையும் மருத்துவமனைகள் தரம் வாய்ந்தவையாக இருக்குமா, சேவை மனப்பான்மையோடு ஈடுபடுவார்களா என்ற கேள்வி எழுகிறது. காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படும் சுமார் 1200 கோடி முறையாக கண்காணிக்கப்படுகிறதா யாரால், எப்படி கண்காணிக்கப்படுகிறது என்கிற கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளன.

0 Responses to 1200 கோடி அரசு காப்பீட்டு பணம் எங்கு செல்கிறது?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...