இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய (தமிழக) மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி- சுண்டிக்குளம் கடற்பரப்பில் 09 மீனவர்களும், நெடுந்தீவு கடற்பரப்பில் 04 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் இரு படகுகளும் பிடித்து வரப்பட்டுள்ளன.
குறித்த மீனவர்களை இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

0 Responses to இலங்கைக் கடலில் அத்துமீறி மீன்பிடி; இந்திய மீனவர்கள் 13 பேர் கைது!