உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. உத்தரப்பிரதேசம் மாநிலம் 1968 முதல் 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை கண்டுள்ளது. மேலும் 2002-க்கு பிறகு பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி மாறி மாறி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்து வந்தது. இந்நிலையில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக.
குடியரசுத் தலைவர் தேர்தலில், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பாஜக முடிவு செய்யும் அளவுக்கு கை ஓங்கியது. மூன்று மாநில தேர்தல்கள் வெற்றி மூலம்.
மாநிலங்களவையிலும் பாஜக கை ஓங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்.
ஆளும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி படுதோல்வி.அடைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்.பஞ்சாபின் புதிய முதலமைச்சராகிறார் அம்ரீந்தர் சிங் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாபில் புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 2வது இடம் பிடித்து எதிர்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.
0 Responses to உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது!