புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக
போராடும் விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை.
இன்று 18 வது நாள் போராட்டத்தில் பசுமாடுகளுடன் வந்த விவசாயிகள் காவி
வேட்டி, பூ நூலுடன் பசு மாட்டிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்
கோரி மனு கொடுத்தனர்.இந்த நிலையில் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலிய
துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நெடுவாசல் போராட்டக் குழுவினர் 10 பேர்
சந்தித்து திட்டம் ரத்து செய்வது பற்றி வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சரின்
முடிவை பொருத்து போராட்டம் முடிவுக்கு வருமா அல்லது போராட்டம் மேலும்
வலுப்பெறுமா என்பது இன்று மாலை தெரியும்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுத்து விவசாய
நிலங்களை மலடாக்கி விவசாயிகளை கொல்ல நினைக்கும் மத்திய அரசே எங்கள்
அழுகுரல் கேட்கலயா என்று புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக போராடும் விவசாயிகள்
மத்திய மாநில அரசுகளின் கவனத்தை திருப்ப தினம் ஒரு கவன ஈர்ப்பு நூதனப்
போராட்டங்களை நடத்தியும் எந்த அரசும் அந்தப் பக்கமே திரும்பிக் கூட
பார்க்கவில்லை.

0 Responses to ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு