Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தடை செய்யப்பட்ட முறைகளில் மீன் பிடிப்பவர்களுக்கு 3 வருடச் சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையிலான சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை தான் முன்னெடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தினை நிறைவேற்றுவதன் மூலம் வடக்கு மீனவர்கள் எதிர்நோக்குகின்ற மடிவலை மீன்பிடி பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண மீனவர் கூட்டமைப்பின் தலைமையில் வவுனியாவில் கூடிய வடக்கு மாகாண மீனவர் சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மடிவலை மீன்பிடி காரணமாக வடக்கு மாகாணக் கடல் வளம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடி வருகின்ற வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடல் வளத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்ற வகையில் இந்த முறையைப் பயன்படுத்துகின்ற மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை, தனி நபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் தான் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பிரேரணையை அரசாங்கத் தரப்பினர் ஏற்று, அதனை அரச தரப்புப் பிரேரணையாக மாற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விரைவில் அது சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தடை செய்யப்பட்ட முறைகளில் மீன் பிடிப்பவர்களுக்கு 2 வருட சிறை; விரைவில் சட்டமூலம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...