கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கூச்சல் குழப்பத்தை அடுத்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை சபை அமர்வு ஆரம்பித்த தருணத்தில், கூட்டு எதிரணியினர் நாமல் ராஜபக்ஷ அல்லது டலஸ் அழகப்பெரும ஆகியோரில் ஒருவரை தமது அணியின் தலைவராக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு கோரினர்.
அதனையடுத்து, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் கூட்டு எதிரணியினருக்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. இதன்போது, கூட்டு எதிரணி கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டது. இதனால், ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர். இதனால், பாராளுமன்றத்தினை எதிர்வரும் 21ஆம் திகதி வரை சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒத்திவைத்தார்.
பாராளுமன்ற விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கூட்டு எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை ஒருவார கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் இன்று எழுந்தது.

0 Responses to கூட்டு எதிரணி கூச்சல்; ஆளும் கட்சி வெளியேற்றம்: பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!