எகிப்தின் 19 ஆம் இராஜ வம்சத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையான ராம்சேஸ் 2 (Ramses II) என்ற மன்னனது மிகப் பழமையான சிதைவடைந்த சிலை ஒன்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொல்பொருள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
மேலும் கெய்ரோவில் கண்டெடுக்கப் பட்ட தொல் பொருட்களில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது என்றும் எகிப்தின் தொல்பொருள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கெய்ரோவின் மட்டாரியா நிலப்பகுதியில் இருந்து எகிப்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்களால் தோண்டி எடுக்கப் பட்ட இந்த சிலையின் முக அமைப்பு 26 அடி உயரமானதாகும். இந்த சிலை ராம்சேஸ் 2 மன்னனுக்கான கோயிலுக்கு அருகே கண்டுபிடிக்கப் பட்டதால் அவருடையதாக இருக்கலாம் என்று கருதப்படும் போதும் அதற்கான குறியீடுகள் சிலையில் காணப்படவில்லை.
Ozimandias என்றும் அழைக்கப் படும் இந்த ராஜவம்சத்தை சேர்ந்த கோயில் அதன் சிலைகள் என்பன கிரேக்க றோமன் காலப்பகுதியில் அழிக்கப் பட்டதுடன் பல சிலைகள் அலெக்ஸாண்டரியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் கொண்டு செல்லப் பட்டதாக வரலாறு கூறுகின்றது. கி.மு 1279-1213 இடைப்பட்ட காலத்தில் 66 வருடங்கள் பண்டைய நுபியா எனப்படும் நவீன சூடான் மற்றும் சிரியாவை ஆட்சி செய்த ராம்சேஸ் 2 என்ற மன்னன் மிகச் சிறந்த மூதாதையன் (great ancestor) என்றும் அழைக்கப் பட்டான்.
அண்மையில் கண்டு பிடிக்கப் பட்ட இம்மன்னனது தலைப்பாகம் மற்றும் இன்னொரு சிறிய உடல் பாகம் ஆகிய சிலைப் பகுதிகள் தற்போது 2018 ஆம் ஆண்டு எகிப்தின் கிஷா நகரில் திறக்கப் படவுள்ள கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகத்தில் வைக்கப் படுவதற்காகக் கொண்டு செல்லப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 3000 வருடங்கள் பழமையான சிலை கெய்ரோவில் தோண்டி எடுக்கப் பட்டது