Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க., சசி அணி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்
உட்பட, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்காதது, பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெறும்
என, சசி அணி அறிவித்திருந்தது. நேற்று மாலை, 6:30 மணியில் இருந்து, 7:35
மணி வரை, கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக
தன்னை அறிவித்து கொண்ட தினகரன், கலந்து கொண்டார். சட்ட சபை கூட்டத்தில்,
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், பன்னீர் அணி, எம்.எல்.ஏ.,க்கள், 12 பேரும் பங்கேற்கவில்லை.
அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டுவெற்றி பெற்ற, தமிழ்நாடு கொங்கு
இளைஞர் பேரவை தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி,
முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் ஆகியோரும் பங்கேற்கவில்லை.சசி அணியில்
இருந்த, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும், கூட்டத்திற்கு
வரவில்லை.

இவர், அதிருப்தி காரணமாக வரவில்லை என, கூறப்படுகிறது. கூட்டம்
துவங்குவதற்கு முன், அமைச்சர் பதவி கிடைக்காததால், அதிருப்தியில் உள்ள,
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, தினகரன் அழைத்து
சமாதானப்படுத்தினார். அப்போது, அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
உடனிருந்தார். பிரச்னை இல்லை: அதே போல், தோப்பு வெங்கடாசலத்தின் நண்பரான,
மொடக்குறிச்சி, எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியனையும், தினகரன் அழைத்து
பேசினார்.

கூவத்துார் சொகுசு விடுதியில் இருந்த போது, சசி தரப்பினர் அளித்த
வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றாததால், பல எம்.எல்.ஏ.,க்
கள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து தினகரன் கூறுகையில், 'தோப்பு
வெங்கடாசலம் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை; என்னுடன் போனில்
பேசினார். வேறு பிரச்னை எதுவுமில்லை' என்றார்.

0 Responses to அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்கவில்லை

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.