தமிழ் அரசியல் கைதிகளில் 43 பேர் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
200க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலரும் நீதிமன்ற செயன்முறைகளினூடாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் 43 பேர் இன்னமும் சிறையில்; வழக்கு விசாரணைகள் முன்னெடுப்பு: டி.எம்.சுவாமிநாதன்