Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் 19 ஏக்கர் காணிகளில், முதற்கட்டமாக 7.5 ஏக்கர் காணிகள் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் ஆகியோர் குறித்த காணிகளை இராணுவத்திடமிருந்து பொறுப்பேற்று பொதுமக்கள் குடியேறுவதற்கு விடுவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் 682வது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75 ஏக்கர் காணிகள், இரண்டு வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணிகள், இராணுவ முகாம் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றப்பட்ட பின்னர், சுமார் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே முதற்கட்டமாக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to புதுக்குடியிருப்பில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் காணிகளில் 7.5 ஏக்கர் விடுவிக்கப்பட்டது!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.