இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் 77 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
அதுபோல, இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்திய கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் விடுதலை காங்கேசன்துறை கடற்பரப்பில் இடம்பெற்றதாக இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தால், அவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை; அத்துமீறினால் தொடர்ந்தும் கைது!