Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று புதன்கிழமை பகல் 2:30 மணிக்கு இலண்டனின் வெஸ்ட்மிண்டர் பகுதியில் பாராளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் அவர் உட்பட 5 பேர் கொல்லப் பட்டதுடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை இதுவரை தாம் கைது செய்திருப்பதாக இலண்டன் போலிசார் அறிவித்தும் உள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 பேர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட தாக்குதல் தாரி பிரிட்டனில் பிறந்தவர் எனவும் தனியாகவே இதில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகின்றது. சர்வதேச தீவிரவாதத்தால் ஈர்க்கப் பட்டு அந்நபர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவர் முதலில் காரை மிக வேகமாக ஓட்டி வந்து வெஸ்ட்மிண்டர் பாலத்தில் பொது மக்கள் மீது மோதியுள்ளார். இதில் 2 பேர் ஸ்தலத்திலும் இன்னொருவர் வைத்தியசாலையிலும் பலியாகி உள்ளனர்.

பின் இந்நபர் மிக நீளமான கத்தியுடன் பாராளுமன்ற நுழைவாயிலுக்குள் செல்ல முயன்ற போது அவனைத் தடுக்க முயன்ற போலிசாரைக் கத்தியால் குத்தியதில் அப்போலிசாரும் பலியானார். சுதாரித்துக் கொண்ட இன்னொரு போலிசார் தாக்குதல் தாரியைச் சுட்டதில் சம்பவ இடத்தில் அத்தீவிரவாதியும் பலியாகி உள்ளார். சம்பவத்தில் காயமடைந்த 40 பேரில் பெரும்பான்மையினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதல் ஆரம்பிக்கப் பட்ட சில நிமிடங்களுக்குள் அதைக் கேள்வியுற்ற போலிசார் பாராளுமன்ற எம்பிக்களையும் பத்திரிகையாளர்களையும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியதுடன் பூரண பாதுகாப்பினை அவர்களுக்கு அளித்தும் உள்ளனர்.

மேலும் சில மணி நேரங்களுக்கு பாராளுமன்ற வளாகம், இலண்டன் ஐ என்பன மூடப்பட்டன. இச்சம்பவத்துக்குப் பல்வேறு உலகத் தலைவர்களும் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிட்டனுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரேசா மே அளித்த செவ்வியில் பிரித்தானியா தனது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதத்தில் தீவிரவாதிகளால் நடாத்தப் பட்ட தாக்குதலைக் கண்டு அச்சம் கொள்ளவில்லை என்றும் ஒருபோதும் தீவிரவாதத்தால் எமது ஒற்றுமையைக் குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

புருஸ்ஸெல்ஸில் 32 பேரைப் பலிகொண்ட ISIS இன் மோசமான தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் பூர்த்தியாகி உள்ள நிலையில் இலண்டனில் இத்தீவிரவாதத் தாக்குதல் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to லண்டன் பாராளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்குதல்: 8 பேர் கைது

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...