Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலியின் கிழக்கு சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா என்ற எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்துச் சீற்றமடைந்துள்ளது. எரிமலை வாயில் இருந்து லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறி வருவதால் அருகே காடானியா நகரில் உள்ள மக்கள் எச்சரிக்கைதுடன் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வானில் பல அடி உயரத்துக்குக் கரும் புகை எழுந்துள்ள போதும் இந்த எரிமலையில் இருந்து 50km தொலைவில் உள்ள காடானியா விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சிக்கல் இல்லாது தொடர்வதாகவும் புகை மூட்டம் தொடர்ந்து அவதானிக்கப் பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பு இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக எட்னா எரிமலை உறங்கிக் கொண்டிருந்த போதும் உலகில் உள்ள உயிர் எரிமலைகளில் (active volcano) இதுவும் ஒன்றாகும். 3330 மீட்டர் உயரமான எட்னா எரிமலை வருடத்துக்குப் பல தடவைகள் சீற்றம் அடையக் கூடியது என்பதுடன் இறுதியாக 1992 ஆம் ஆண்டு பாரியளவில் வெடித்துச் சிதறியிருந்தது.

ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை எட்னா என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இத்தாலி எரிமலை சீற்றம் : விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை

Post a Comment

Followers