மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலருக்கும் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளருக்கும் நீதிமன்றம் நாளை அழைப்பாணை விடுத்துள்ளது.
பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளப்போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் குறித்த சங்கத்தின் இருவருக்கும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் ஆகியோருக்கே இந்த அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தேசிய இணைப்பாளர் உட்பட நான்கு பேருக்கு அழைப்பாணை