Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவர்களே, புலிகளின் ஆயுதத்தை பாதாள உலகக் குழுக்களிடம் விற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அந்த ஆயுதங்களே நாட்டில் சட்டத்துக்கு விரோதமான முறையில் பயன்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொட்டவா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆரம்பத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சி (ஜே.வி.பி) காணப்பட்டது. அப்போது ஆயுதங்களுடன் அவர்கள் போராடி மக்களை வீதிகளில் கொன்று போட்டனர்.

பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் காணப்பட்டது. இவற்றை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள், புலிகளின் ஆயுதங்களை இவ்வாறு ஆயுதக் குழுக்களுக்கு விற்றிருக்க வேண்டும். ஏனெனில் இன்று பாவனையில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆயுதங்களும் புலிகளின் ஆயுதங்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இவை கண்டறியப்பட வேண்டும். அதேபோல் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவந்ததை போலவே இந்த பாதாள கோஷ்டிகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று நாட்டில் மோசடிக்கார குழுக்களும் ஆயுதக் குழுக்களும் அதிகளவில் உருவாக்கம் பெற்றுள்ளன. நாட்டில் சகல பகுதிகளிலும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதங்களை பாதாள கோஷ்டிகளுக்கு பணத்திற்கு விற்றுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது. நாட்டில் அமைதியை உருவாக்கவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எனினும் ஒருசிலர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றமை நன்றாக வெளிப்பட்டு வருகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழுக்களிடம் விற்றுள்ளனர்: சம்பிக்க ரணவக்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...