Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவும் ஜப்பானும் வைக்கும் பொறியில் இந்தியா விழுந்து விடக் கூடாது என்றும் அவ்வாறான ஒரு காய்நகர்வு இந்தியாவுக்கு மிக அதிக அழுத்தத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடியது என்றும் சீனாவின் குளோபல் டைம்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

இதில் விரிவாக இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்தியாவையும் இந்தியாவின் உதவியோடு பசுபிக் சமுத்திரத்தில் சீனாவை சமப்படுத்த ஜப்பானும் எத்தனிக்கின்றன எனப்பட்டுள்ளது. மேலும் இவை இந்தியாவுக்குப் பிராந்திய மூலோபாய சந்தர்ப்பங்களாகத் தென்பட்டாலும் இவை அனைத்தும் வெறும் பொறிகளே அன்றி வேறல்ல என்பதுடன் இவற்றில் இந்தியா விழுந்து விட்டால் அமெரிக்காவினதும் ஜப்பானினதும் கைப்பாவையாக இந்தியா மாறி பிராந்திய நலன் தரக்கூடிய பல சந்தர்ப்பங்களையும் இழந்து ஆபத்தையும் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

உலகில் வல்லரசு என்று கருதக்கூடிய நாடுகளில் ஒன்றான இந்தியா தனது பாதுகாப்புக்கு புற சக்திகளை சார்ந்திருந்தால் அது அதன் வளர்ச்சியை முடக்கக் கூடும் என்றும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் ஆசியப் பசுபிக் வலயத்தில் முக்கிய சக்திகளாக சீனாவும் இந்தியாவும் தொழிற்படுவதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவை அதிகரிக்க ஒப்புக் கொண்டது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவில் இடைவெளியை ஏற்படுத்தி விட்டதாகவும் சீன ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்தியா தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டால் அதன் மீது ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறைவடைந்து சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என்றும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை, ஹட்ரோ எலெக்ட்ரிக் திட்டங்கள் மற்றும் துறைமுகக் கட்டுமானங்கள் போன்ற விடயங்களில் சீனாவுடன் இந்தியா வர்த்தகத் தொடர்பைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவை அமெரிக்காவும், ஜப்பானும் பயன்படுத்துவதாக சீன ஊடகம் செய்தி வெளியீடு

Post a Comment

Followers