கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜேர்மனி சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் ஆகியோர் கலந்து பேசினர். இப்பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னர் இருவரும் கைகுலுக்கவில்லை எனத் தெரிய வருகின்றது. இரு நாட்டு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் நேட்டோ அமைப்பை வலுப்படுத்துவது, ISIS இயக்கத்தை அழிப்பது, ஆப்கான் உக்ரைன் விவகாரங்கள் போன்றவை முக்கிய அம்சம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகின்றது. செய்தியாளர் மாநாட்டில் மேர்கெல் கூறுகையில், இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எமது செயற்பாடுகளால் இரு நாட்டு மக்களும் நண்மை அடைய வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் ஒருவர் மீது இன்னொருவர் குறை சுமத்துவதை விட இருவரும் தமக்கிடையே பேசிக் கொள்வது மேல் என்றும் கூறினார்.
டிரம்ப் பேசும் போது தான் அமெரிக்காவை முன்னிலைப் படுத்துவதால் பிறரை விலக்குபவன் அல்ல என்றும் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு கடந்த சில வருடங்களாக அநீதி இழைக்கப் பட்டு வருவதாகவும் இதனால் நான் தாராள வர்த்தகக் கொள்கையை ஆதரித்த போதும் நியாயமான வர்த்தகத்தை ஆதரிப்பவன் என்றும் தெரிவித்தார். டொனால்ட் டிரம்பினது குடியேற்றக் கொள்கை மற்றும் அமெரிக்காவை முன்னிறுத்தும் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் உடன்பாடற்ற தலைவர்களில் ஏஞ்சலாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஜேர்மனியில் நடைபெறவுள்ள் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள டிரம்புக்கு அழைப்பு விடுத்ததாக ஏஞ்சலா மேர்கெல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to கை குலுக்காது தொடங்கிய செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் மற்றும் ஏஞ்சலா இடையே கருத்து மோதல்