Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செண்பகவல்லி அணையைச் சீரமைத்துத் தருக என்று கேரள முதல்வர் பினராயி
விஜயனிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.
கேரள முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களுக்கு,

வணக்கம். உலகின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக (Unesco heritage site)
ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின்
நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடுகின்ற தொன்மையான
ஆறுகளுள் ஒன்று செண்பகவல்லி.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, சங்கரன்கோவில்,
விருதுநகர் மாவட்டத்தின் இராசபாளையம் வட்டாரத்தில் பாசனத்திற்கும்,
குடிநீருக்கும் செண்பகவல்லி ஆற்றுத் தண்ணீர்தான் ஊற்றாகத் திகழ்கின்றது.
இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு முதன்மையான குடிநீர் ஆதாரமும்
செண்பகவல்லித் தண்ணீர்தான்.

ஆற்றுத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில்,
செண்பகராமன் பிள்ளை அவர்கள், ஒரு சிறிய அணையைக் கட்டினார்கள். அந்த அணை
தற்போது கேரள மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கின்றது. 1773 ஆம் ஆண்டு
கட்டப்பட்ட அந்த அணையில் தேக்கப்படுகின்ற தண்ணீர், ஆண்டுமுழுமையும்
விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. இரண்டு மாநில விவசாயிகளும் பயன்பெறத்
தக்க வகையில், செண்பகவல்லி ஆற்று நீரைப் பிரச்சினை இன்றிப் பகிர்ந்து
கொண்டு வருகின்றார்கள்.

1935 ஆம் ஆண்டு செண்பகவல்லி அணையில் சிறிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுப்
பழுதாயிற்று. முதன்மைக் கhல்வாயின் ஒரு பகுதி உடைந்து போயிற்று. இதன்
விளைவாகத் தமிழகத்திற்குக் கிடைத்து வந்த தண்ணீர் கிடைக்கhமல் போயிற்று.
அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

1955 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பு வகித்த
பெருந்தலைவர் கhமராசர் அவர்கள், செண்பகவல்லி அணையைப் பழுது பார்ப்பதற்கhன
நடவடிக்கைகளை மேற்கொண்டார். கேரள அரசும் ஒத்துழைப்பு நல்கிற்று.
ஓரளவிற்குப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுத் தண்ணீர் வரத்து சீர்
செய்யப்பட்டாலும், உடைந்து போன முதன்மைக் கhல்வாய் முழுமையாகக் கட்டி
முடிக்கப்படவில்லை. எனவே, ஆயக்கட்டுதாரர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள
இயலவில்லை.

பின்னர் முதல் அமைச்சராகப் பொறுப்பு வகித்த எம்.ஜி.ஆர்., அவர்கள்,
இந்தப் பிரச்சினையைக் கேரள அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவரது
வேண்டுகோளை ஏற்று, செண்பகவல்லி அணையில் பழுதுபார்ப்புப் பணிகளை
மேற்கொள்ளக் கேரள அரசு ஒப்புக் கொண்டது. அதற்கhன செலவுத் தொகையைத்
தருவதாகத் தமிழக அரசு ஒப்புக் கொண்டது. 1978-79 ஆம் ஆண்டில், ரூ. 5.80
இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டைக் கேரள அரசின் பொதுப்பணித்துறை
வரைந்தது. 10.09.1980 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை 1525 இன்படி,
அந்தத் தொகையைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அந்தத் தொகை கேரள அரசு
கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு பழுது பார்ப்புப் பணிகளை
உடனடியாகத் தொடங்கhததால் திட்ட மதிப்பீடு உயர்ந்தது.

1981 ஆம் ஆண்டு வரையப்பட்ட புதிய திட்ட மதிப்பீட்டின்படி, ரூபாய்
7,52,170 தேவை எனக் கேரள அரசின் பொதுப்பணித்துறை கோரியது.

21.03.1980 அன்று, அந்தத் தொகைக்கும் ஒப்புதல் அளித்து, தமிழக அரசு ஆணை
பிறப்பித்தது. அரசு ஆணை எண் 585.

0 Responses to செண்பகவல்லி அணையைச் சீரமைத்துத் தருக:பினராயி விஜயனிடம் வைகோ

Post a Comment

Followers