உத்தரப்பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றியை அடுத்து அங்கு முதலமைச்சராக யாரை நியமிப்பது என முடிவெடுப்பதில், பாரதிய ஜனதா கட்சித் தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமர் மோடியை நேற்றிரவு ஒன்றாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, கட்சியின் அடிமட்டத் தொண்டராக தொடர்ந்து தாம் செயல்பட்டு வருவதாக பிரதமரிடம் தெரிவித்த மவுரியா, எந்தப் பதவியைக் கொடுத்தாலும்
கட்சியின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படுவேன் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றது. ஒருவேளை அவர் முதல்வராகும் பட்சத்தில், மத்திய அமைச்சரவையில் அவரது இடம் காலியாகும் என்பதால், அந்தப் இலாகாவை யாருக்கு வழங்குவது என்பது பற்றியும் பாரதிய ஜனதா கட்சி ஆலோசித்து வருகிறது.
உத்தரப்பிரதேச முதல்வராக ராஜ்நாத் சிங் பதவியேற்கும் பட்சத்தில், மத்திய உள்துறை அமைச்சர் பதவியில், கட்சித் தலைவரான அமித் ஷா நியமிக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to உத்தரபிரதேச முதல்வராகிறாரா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்?