Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு பகுதி நாளை சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பில் விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருந்த காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே, நாளை முதல் இக்காணிகளை படிப்படியாக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதுக்குடியிருப்பில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அரசாங்கம் இக்காணிகளைப் படிப்படியாக விடுவிக்கத் தீர்மானித்துள்ளது.

மூன்று கட்டங்களாக இந்த காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளதுடன், நாளை சனிக்கிழமை (மார்ச் 04) முதற்கட்ட காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளது. அடுத்து 3 மாத காலத்திலும், அதற்கடுத்து 6 மாதகாலத்திலும் இந்த காணி விடுவிப்பு இடம்பெறும்.” என்றுள்ளார்.

0 Responses to புதுக்குடியிருப்பில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளில் ஒரு பகுதி நாளை விடுவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...