அதிமுக என்ற கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இருதரப்பும் 3 சின்னங்களை தேர்வு செய்து இன்று காலை 10 மணிக்குள் அணுகலாம் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடைபெற முடியாது. சட்டப்பிரிவு 329 பி.ன் படி நடத்தை விதிகள் அமலில் உள்ள போது நீதிமன்றத்தில் தடைபெற முடியாது தகவல்கள் தெரிவிக்கின்றன. நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு இரண்டு தரப்பும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவின் சாரம்சம்- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியின் பெயரையோ, அக்கட்சியின் சின்னம் ஆன 'இரட்டை இலை'யையோ இரு அணிகளும் பயன்படுத்தக் கூடாது. தாய் கழகத்தோட ஒத்து போகும் ஒரு புதிய பெயரை இரு அணிகளும் தேர்வு செய்து கொள்ளலாம். சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையம் அளிக்கும் இலவச சின்னங்களில் இருந்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்து இரு அணிகளும் போட்டியிடலாம். நாளை(23.3.2017) காலை 10 மணிக்குள், தங்கள் அமைப்பின் புதிய பெயர், விருப்பப்பட்ட மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்தின் முன்பு இரு அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

0 Responses to அதிமுக கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை!