ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் பிரித்தானியாவின் அறிக்கையை வாசித்தார். அதிலேயே இலங்கைக்கான கால அவகாசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தியுள்ளார். அதன்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானங்களை அமுலாக்க இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்: பிரித்தானியா