முப்பது வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனாலும், அரசாங்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல் மாற்றங்கள் முன்னெடுக்கப்படாத நிலையில், தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் தற்போது (இன்று சனிக்கிழமை) இடம்பெற்றுவரும் ‘ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ அலுவக திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட காலம் முதல் தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலத்த ஒத்துழைப்புடன் செயற்பட்டது. அது, புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டதனால் ஆகும்.
ஆனால், புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழ் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகள் பெரிதாக நிறைவேற்றப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சில விடயங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இந்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போது, வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் தமது காணிகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். வேலையில்லா பட்டதாரிகள் தமக்கான வேலைகளைக் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவற்றுக்கான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.
நீங்கள், ஜனாதிபதியாக பதவியேற்றதும் வடக்கு- கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் காணிகளை ஆறு மாதங்களுக்குள் விடுவிப்பதாக தெரிவித்தீர்கள். ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. சில ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்: மைத்திரி முன்னிலையில் மாவை தெரிவிப்பு!