Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடகவியலாளர்களையும், விளையாட்டு வீரர்களையும் படுகொலை செய்த இராணுவத்தினரை தன்னால் காப்பாற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபடாத வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் தண்டிக்கப்படுவது தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவம் உள்ளிட்ட முப்படையினரையும் தான் காப்பாற்றுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் இலங்கை மீண்டும் நற்பெயரைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இராணுவத்தினரை காக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers