ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை
தொடங்கும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா தூதர் டிம் பேரோ இதை உறுதி
செய்துள்ளார்.எதிர்வரும் மார்ச் 29ம் திகதி சட்ட உட்பிரிவு 50 - இன் கீழ்

தொடங்கவுள்ளதாக பிரதமர் தெரசா மே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கான கடிதத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டோனால்ட் டஸ்க்கை சந்தித்த
பிரித்தானியா தூதர் டிம் பேரோ அளித்துள்ளார். அந்த கடிதத்தில், ஐரோப்பிய
ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை 29ம்
திகதி தொடங்க உள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடைமுறைகளை ஐரோப்பிய
ஒன்றியம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.வெளியேற்ற
நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை திகதி