Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காலிக்குடங்கள் இல்லாத தொகுதியாக ஆர்.கே.நகர் உருவாகும் என்று தமிழக பாஜக வேட்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது தொகுதி முழுவதும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் அடிப்படை பிரச்னைகளையும், அதற்குரிய தீர்வுகளையும் முன்வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

செவ்வாய்க்கிழமையான நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட எழில்நகரில் கங்கை அமரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் மாநிலச் செயலாளர்கள் கரு.நாகராஜன், சி.ராஜா உள்பட நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள், சாலையோர வியாபாரிகள், கூலித் தொழிலாளிகள் ஆகியோரைச் சந்தித்து, தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தின்போது காலிக்குடங்களுடன் வந்த பெண்களை சந்தித்த கங்கை அமரன், ‘இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களித்தால் காலிக்குடங்கள் இல்லாத ஒரு தொகுதியாக ஆர்.கே.நகர் தொகுதி உருவாகும். மேலும் தொகுதி முழுவதும் தற்போது குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால் குடிநீர் பஞ்சத்தைப் போக்க எந்தக் கட்சிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பாஜக கட்சியை இந்தத் தொகுதியில் வெற்றி பெறச் செய்தால் இந்தப் பிரச்னையை முற்றிலும் சரி செய்துவிடுவோம். இதை நான் எந்தவித அரசியல் நோக்கத்துடனும் சொல்லவில்லை. வெளிப்படையான மனதுடன்தான் தெரிவிக்கின்றேன்’ என அப்பகுதி மக்களிடம் அவர் தெரிவித்தார்.

0 Responses to காலிக்குடங்கள் இல்லாத தொகுதியாக ஆர்.கே.நகர் உருவாகும்: கங்கை அமரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...