அரச வேலை வாய்ப்புக் கோரி கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்று சில ஆண்டுகளுக்கு முன்னரே தாம் வெளியேறியுள்ள போதிலும், தமக்கு அரச வேலை ஏதும் வழங்கப்படவில்லை என்று வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to வடக்கின் வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!