Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசப் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு, ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1, தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தர நியமங்களுக்கு ஏற்ப திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய அளவு தனியார் நிலங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளமை, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடுகள், பாரிய எண்ணிக்கையான பெண்கள் மற்றும் ஆண்களின் இடம்பெயர்வு, 32 இடம்பெயர்ந்தோர் முகாம்ங்கள் தொடர்ந்தும் இயங்குவது என்பன கரிசனைக்குரிய விடயங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்தோடு, மீள்குடியமர்வுக்கு இராணுவமயமாக்கல், பாரிய தடையாக இருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகளின் குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா

Post a Comment

Followers