‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹேந்ரவிதாரணவின் கீழ் இயங்கிய விசேட குழுவே என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, ஊடகவியலாளர்களான உபாலி தென்னக்கோன், கீத் நொயார் ஆகியோர் மீதான தாக்குதல்களிலும், மேலும் சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு துன்புறுத்தல் சம்பவங்களுடனும் இந்தக் குழு தொடர்புபட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கல்கிசை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு விசாரணைகளின் போதே பொலிஸார் மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளனர்.
கபில ஹேந்ரவிதாரணவின் கீழ் இயங்கிய விசேட குழுவினால் ஐந்து சிம் காட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து அழைப்புக்களுக்கும் இந்த சிம் காட்களே பாவிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

0 Responses to மேஜர் ஜெனரல் கபில தலைமையிலான குழுவே லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது!