அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திரும்ப வந்தால், அவர்களை ஏற்க தயாராக உள்ளோம் என்று தம்பித்துரை கூறினார்.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை செய்தியாளர்கள் சந்தித்த போது பன்னீர்செல்வத்தை, பா.ஜ.க, இயக்குகிறதா அல்லது வேறு யாராவது இயக்குகின்றனரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், யாரோ சிலரின் துாண்டுதலிலேயே, அவர் இவ்வாறு செயல்படுகிறார். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திரும்ப வந்தால், அவர்களை ஏற்க தயாராக உள்ளோம். தற்போது, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்நடக்கிறது. அதன்பின், கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

0 Responses to பன்னீர்செல்வத்தை ஆதரிக்க தயார்: தம்பித்துரை