Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிச்செல்
ஆகிய இருவர் எழுத உள்ள இரண்டு புத்தகங்களை ரூ.1,000 கோடிக்கு மேல்
விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதிகளின் வரலாற்றில் பதவியை இழந்த பின்னர் தங்களுடைய சொந்த அனுபவங்களை புத்தகங்களாக எழுதி வெளியிடுவது வழக்கம்.இந்த வரிசையில்
முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் எழுதிய My Life என்ற புத்தகத்தின்
விற்பனை உரிமையை 15 மில்லியன் டொலருக்கு அளித்தார்.ஜோர்ஜ் டபள்யூ புஷ்
எழுதிய Decision Points என்ற புத்தகத்திற்கு அவர் 10 மில்லியன் டொலரை
வருமானமாக பெற்றார்.

இந்த வரிசையில், ஒபாமா மற்றும் அவரது மனைவியான மிச்செல் ஆகிய இருவரும்
சேர்ந்து இரண்டு புத்தகங்களை எழுத உள்ளனர். இந்த இரண்டு புத்தகங்களை
உலகம் முழுவதும் விற்பனை செய்யும் உரிமையை Penguin Random House என்ற
நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது வரை இந்த இரண்டு புத்தகங்களின் விற்பனை
உரிமையை பெறுவதற்காக ஒபாமா மற்றும் மீச்செலுக்கு 60 மில்லியன்
டொலருக்கும்(906,78,00,000 இலங்கை ரூபாய்) அதிகமான தொகையை வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.

எனினும், இருவரும் எழுத உள்ள புத்தகங்களின் தலைப்புகள் இதுவரை
வெளியாகவில்லை.முன்னதாக, Dreams From My Father மற்றும் The Audacity of
Hope ஆகிய இரண்டு புத்தகங்களை ஒபாமா எழுதி வெளியிட்டது
குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிச்செல் எழுத உள்ள இரண்டு புத்தகங்கள்

Post a Comment

Followers