Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொடர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் பொது உடன்பாடொன்றுக்கு வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் கடற்பாதைகளைப் பயன்படுத்துகின்றனர். நாடுகளின் இறையாதிக்கத்துக்குக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் வலயத்தில் இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக உரிய ஏற்பாடுகள் இல்லாதிருப்பது பாரிய சிக்கலாகும். அதற்கு தீர்வு காணும் பொருத்தமான முறைமையை உருவாக்குவதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் விரைவாக கவனம் செலுத்த வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் கைத்தொழில் போன்று பரவியிருப்பது தொடர்பில் பிராந்திய அரச தலைவர்களின் கவனம் செலுத்த வேண்டும். பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், திருப்தியடையக்கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை.

இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு அண்மையிலுள்ள நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் பயன்கிட்டிய போதிலும், கப்பற்போக்குவரத்துக்களில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகள், கடற்கொள்ளை போன்ற குற்றங்கள் தொடர்பில் பிராந்தியத்திலுள்ள அனைத்து அரச தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம்மிக்க இடத்தில் இலங்கை அமைந்திருப்பது நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் உயர்ந்த பட்ச பயன்பாட்டை பெறக்கூடியவாறு பயன்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.

இந்து சமுத்திர பிராந்தியம் துரிதமாக வளர்ச்சியடையும் பிராந்தியம் என்பதனால் அப்பிராந்தியத்தில் தோன்றும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய முறை தொடர்பில் விரைவான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு இந்த மாநாடு மிக பொருத்தமான இடமாக இருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...