Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் எந்தவொரு தருணத்திலும் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரேரணைக்கு அப்பொழுது அனுசரணை வழங்கிய அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் காலஅவகாசம் வழங்குவதற்கு ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான ஐக்கியநாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஜெனீவாவில் இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அதிகாரியின் அறிக்கையை பயன்படுத்தி குறுகிய நோக்கத்தை கொண்டு செயற்படும் சிலர் நாட்டு மக்களை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கு முயற்சிக்கின்றனர். மக்கள் இவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது. உண்மை நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...