வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்ற எவையும் இல்லாமல் தனி ஆளாகவே
அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் மாற்றமடைந்து
வரும் பின்னணியில் இந்த பயங்கரவாதத்தைத் தடுக்க முடியுமா என்கிற அச்சம்
எழுந்துள்ளது.
புலனாய்வு அமைப்புகளால் பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க
முடியுமா என்கிற விவாதம், லண்டன் தாக்குதலைத்தொடர்ந்து மீண்டும்
சூடுபிடித்துள்ளது.பிரிட்டனில் 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 பயங்கரவாத
தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் பாதுகாப்புப் படையினர்
கூறுகிறார்கள்.இத்தகைய தாக்குதல்களுக்கு திட்டமிடுபவர்களை
கண்டுபிடிப்பதில் எம்ஐ5 அமைப்பும், காவல்துறையும் பெருமளவு
முன்னேறியிருந்தாலும் தாக்குதலாளிகள் தங்களின் வழிமுறைகளை தொடர்ந்து
மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.
சர்வதேச புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவர்கள் தமது
தாக்குதல்களை வடிவமைக்கிறார்கள் என்பதால், இவற்றைத் தடுக்க முடியுமா
என்கிற அச்சம் எழுந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய கட்டாய நிலை
இருப்பதாக புலனாய்வு பிரிவினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

0 Responses to அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் மாற்றம்