ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை செயற்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கோரியிருப்பது சந்தேகத்துக்கிடமானது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இறுதி மோதல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் முயற்சியை வெளிநாடுகள் இன்னமும் கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதியும், பிரதமரும் கூறி வருகின்றனர். ஆனால் ஜெனீவா பிரேரணையின் ஆறாவது பிரிவில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறானால் குறித்த பிரிவை மாற்ற வேண்டும். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சியில் அதற்கான அவகாசம் உள்ளது. அதனை பயன்படுத்த முடியும். ” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா.வின் கால அவகாசம் சந்தேகத்துக்கிடமானது: ஜீ.எல்.பீரிஸ்